Chettinadu vathalkulambu

வத்தக்குழம்பு செய்வது எப்படி ?

 

சீக்கிரமாகவும், எளிமையாகவும் மற்றும் விரைவாகவும் தயாராகும் வத்தக்குழம்பு பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள். வத்தக்குழம்பு அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு குழம்பு வகை. தினசரி வீட்டில் சமைக்கவில்லை என்றாலும் அவ்வப்போது நாம் இதை சுவைக்க தவறுவதில்லை.

தேவையான பொருட்கள் :

சுண்டைக்காய் வத்தல் – 5 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 3 (நறுக்கியது)

பூண்டு – 10 பற்கள்

தக்காளி – 1 (நறுக்கியது)

புளி – 1 எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – 2 டீஸ்பூன்

மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு:

கருவேப்பிலை – சிறிதளவு

உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

எண்ணெய் – 3 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்பு அதில் சுண்டைக்காய் வத்தல், வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
  • அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி மசாலா கலவை (மஞ்சள்/தனியா/மிளகாய் தூள்) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து
  • நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது ஓரளவு கெட்டியாக, எண்ணெய் பிரியும் நிலையில் வரும் போது, அதனை இறக்கினால்
  • செட்டிநாடு சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி!!!
  • வத்தக்குழம்பு 10 நிமிடம் வரை நன்றாக கொதித்தால் தான்
  • அது நன்றாக கெட்டியாகி எண்ணெய் தளர்ந்து சாப்பிடும் பதத்திற்கு வரும்.

பின்குறிப்பு :-

எந்த சமையல் ஆகினும் வெங்காயம் தக்காளி  சரியா வதக்கிடாலே போதும்…குழம்பு தொக்கு எதுனாலும் அருமையாக இருக்கும்.

 

மற்றுமொரு நல்ல சமையல் குறிப்பில் சந்திப்போம்

தென்றல்

READ  தக்காளி பூண்டு கார சட்னி செய்வது எப்படி

Related

Thakkali satni

தக்காளி பூண்டு கார சட்னி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் : தக்காளி – 5 no சிவப்பு மிளகாய் – 8 முதல் 10 வரை பூண்டு – 12 பல் இஞ்சி – ஒரு சிறிய துண்டு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – சுவைக்கு ஏற்ப கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு தயார் செய்முறை : முதலில் தக்காளியை நான்காக அரிந்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நேர்வாகில் அரிந்து கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி சிறுசிறு […]

error: Content is protected !!
%d bloggers like this: