வீட்டுக்கு வாங்க என்ற எம்.ஜி.ஆர்

வீட்டுக்கு வாங்க என்ற எம்.ஜி.ஆர்

மறுத்த கர்ம வீரர்.

காரணம் என்ன தெரியுமா?

அவர் தான் மக்கள் முதல்வர்–!

எம்ஜிஆர் ஒரு திமுக காரர்,பின்பு பிரிந்து அதிமுக என்கிற கட்சியைத் துவங்கினார் முதல்வர் ஆனார்.

இவ்வளவுதானே நமக்கு தெரியும்.

ஆனால் பலருக்கு தெரியாத விஷயம்

எம்ஜிஆர் ஆரம்பத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர்.

ஆரம்பம் தொட்டே கதர் ஆடை தான் அணிந்தார் எம்ஜிஆர். அதன் பின் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நட்பு கிடைத்து திமுகவில் இணைந்தார்.

ஆனாலும் கடைசி வரை கர்மவீரர் காமராசர் மீது தீராத பாசம் வைத்திருந்தார் எம்ஜிஆர்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை சந்தித்து மகிழ்ந்தார்.

தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது.

காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும் அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும்.

ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி “சொல்றேன்” என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.

கடைசியாக ஒரு முறை அழைத்து விடுவது என்கிற நம்பிக்கையில் சிவாஜி, எம்ஜிஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார்.

வழியனுப்பும் போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்ஜிஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல் “ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது என்றில்லை.

“உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள்.

“நான் மக்கள் ஊழியக்காரன் ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திருப்பியும் அந்த ருசி நாக்கு தேடும்..அதுக்கு நான் எங்கே போறது” என்று கூற ஆடிப்போனார் எம்ஜிஆர்.

தன்னையும் அறியாமல் காமராஜரை வணங்கி விட்டாராம் எம்ஜிஆர்.

அதுமுதல் காமராஜரை அழைப்பதில்லை..!

இப்படி ஒரு முதல்வர் நமது தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார்.

READ  ஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள்

Related

ஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள்

ஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள் யாவை?   துணையிடம் அவன் என்னும் ஆண்: ஆண் தோற்றுப்போவதை விரும்புவான் மனைவியிடம் அல்ல தன் மகளிடம்.அன்பால் ஆளுபவளிடம் முரடனும் அடிமையாகி விடுவான். தாயிடம் அவன் என்னும் ஆண்: தாயை தெய்வமாகவே நினைப்பான். அவளுக்கு மட்டும் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டான். உன் அம்மாவா? நானா? என்று வீண் வாக்குவாதம் செய்தால் மன உளைச்சலும் வெறுப்புமே ஏற்படும் அவனுக்கு. தாயே எல்லாம் அவனுக்கு என்பதையே ஏற்றுக்கொண்டால் அவன் தாயின் […]

error: Content is protected !!
%d bloggers like this: