Mesha rasi

மேஷ ராசிக்கு உகந்த தொழில்கள்

 

மேஷராசி அன்பர்களே..!!

ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மேஷ ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.

தொழில் அமைப்பு

மேஷ ராசிக்காரர்களுக்கு பொதுவான தொழில் அமைப்பு பத்திரிக்கை கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்தால் சிறப்பு. இந்த ராசிக்காரர்களை நண்பர்களாக வைத்துக் கொள்வதும் நல்லது.

உங்கள் ராசிகளுக்கான காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?

செல்வ வளம் எப்படி?

மேஷராசிக்காரர்கள் மின்னல் வேகத்தில் முன்னேறுவதில் மேஷ ராசிக்காரர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. எதிலும் வெற்றி யோகம் தான். இவரது பணப்புழக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். தலை சிறந்த தலைவராகவும் புகழ் பெற்றவராகவும் இருப்பர்.

செவ்வாய் கிரகத்தின் பார்வையில் இருப்பதால் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்.

உடல்நிலை:

உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் வகையிலான உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு பெரும்பாலான வியாதிகள் ரத்த சம்பந்தமான தாகவே இருக்கும்.

அடிக்கடி தண்ணீர் குடித்தல், மதியம் ஏதேனும் ஒரு பழ ரசம், இரவில் பால் அருந்துதல் நலம் தரும். மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தினங்களில் விரதம் இருப்பது சிறப்பு ஆகும்.

வியாழக்கிழமை மட்டும் உகந்தது அல்ல.

மேஷ ராசிக்காரர்களுக்கு உரிய அதிர்ஷ்ட எண்-9 இவர்களுக்கு 9 கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் நன்மை பயக்கும்.

மேஷ ராசியினர் காதலில் நாயகனாக திகழ்வர். இதனால் தங்களின் இளமை பருவத்தை சரியான வகையில் நேரத்தை பயன்படுத்துவது நல்லது. காதலுக்காக அதிக நேரம் செலவழிப்பதை தவிர்த்தால் இவர்களின் இன்னும் கூடுதல் சிறப்பானதாக இருக்கும்.

READ  மாசி மாதம் ராசிபலன் - மேஷம்

Related

Astrology images

மாசி மாத ராசிபலன் -கும்பம்

  கும்ப ராசி அன்பர்களே…. சுக்கிரனின் உச்ச நிலையால் கும்பராசிக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மாதம் இது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும்.  ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுப காரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள்  நடக்கும்.செவ்வாய் பதினொன்றாமிடத்தில் […]

Astrology images

மாசி மாத ராசிபலன் – மகரம்

  மகர ராசிக்கான மாசி மாத ராசிபலன் ராசியில் சனி இருப்பதால் மகர ராசி இளைய பருவத்தினர் மனம் அலைபாயும் மாதம் இது. குறிப்பாக உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடப்பதற்கான அறிமுக சந்தோஷ நிலைகள் இப்போது இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். இளம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பவே வேண்டாம். ஜென்மச் சனி நேரத்தில்தான் இழக்கக் கூடாத ஒன்றை […]

Astrology images

மாசி மாதம் ராசிபலன் – தனுசு

  தனுசு ராசிக்கான மாசிமாதம் பலன்கள்  தனுசுக்கு ஏறக்குறைய ஏழரைச் சனி முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இனிமேல் சனியால் கெடுதல்கள் இருக்காது. பாக்யாதிபதி சூரியன் சொந்த வீட்டைப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நாட்கள் அவருடன் புதன் வலுவாக இருக்கிறார். மாசிமாதம் தனுசுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை பலன்கள் இருக்காது. திப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் […]

Astrology images

மாசி மாத ராசிபலன் – விருச்சிகம்

  விருச்சிக ராசிக்கான மாசி மாத பலன்கள்  ஏழரைச்சனி காரணமாக முடக்கமான நிலையை சந்தித்த விருச்சிகத்திற்கு மாற்றம் வந்து விட்டது. இனிமேல் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொருளாதார மேன்மையுடன், நல்ல பணவரவு மற்றும் அந்தஸ்துடன் இருக்க வேண்டிய சூழல்கள் உருவாகி நல்ல எதிர்காலத்தை அடைவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு மாசி நல்ல மாதமே. குறிப்பாக ராசிநாதன் செவ்வாய் முழு சுபத்துவம் பெறுவதால் விருச்சிகராசிக்கு மாசி மாதம் நன்மைகளை மட்டுமே தரும். உங்களின் பின்னடைவுகளை தீர்க்கும் மாதம் […]

error: Content is protected !!
%d bloggers like this: