Astrology images

மாசி மாதம் ராசிபலன் – கடகம்

 

மாசி மாதம் கடகம் ராசிபலன்

  • சூரியன் எட்டில் இருப்பது. கடக ராசிக்கு பொருளாதார விஷயத்தில் சாதகமற்ற நிலைதான் என்றாலும் ராஜயோகாதிபதி செவ்வாய் சுபத்துவமாக ஆறில் இருப்பதால் சிக்கல் எதுவும் வராது.
  • அதேநேரத்தில் பண விஷயங்கள் முயற்சிகளுக்கு பின்பே வெற்றி அடையும். சுக்கிரனின் உச்சநிலையால் பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.
  • திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு.
  • மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் மாதம் இது.
  • வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு லட்சியத்தை அடைவதற்கான முயற்சிகள் இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தினால் சில காரியங்கள் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் நடைபெறும்.
  • நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். பெண்களின் மதிப்பு உயரும்.
  • பெண்களுக்கு அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும்.
  • அனைத்து கடக ராசிக்காரர்களுக்கும் மாசிமாதம் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை தரும் மாதமாக இருக்கும்.
READ  மாசி மாதம் ராசிபலன் - மிதுனம்
READ  மாசி மாதம் ராசிபலன் - ரிஷபம்

Related

Mesha rasi

மேஷ ராசிக்கு உகந்த தொழில்கள்

  மேஷராசி அன்பர்களே..!! ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மேஷ ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.

Astrology images

மாசி மாத ராசிபலன் -கும்பம்

  கும்ப ராசி அன்பர்களே…. சுக்கிரனின் உச்ச நிலையால் கும்பராசிக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மாதம் இது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும்.  ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுப காரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள்  நடக்கும்.செவ்வாய் பதினொன்றாமிடத்தில் […]

Astrology images

மாசி மாத ராசிபலன் – மகரம்

  மகர ராசிக்கான மாசி மாத ராசிபலன் ராசியில் சனி இருப்பதால் மகர ராசி இளைய பருவத்தினர் மனம் அலைபாயும் மாதம் இது. குறிப்பாக உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடப்பதற்கான அறிமுக சந்தோஷ நிலைகள் இப்போது இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். இளம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பவே வேண்டாம். ஜென்மச் சனி நேரத்தில்தான் இழக்கக் கூடாத ஒன்றை […]

Astrology images

மாசி மாதம் ராசிபலன் – தனுசு

  தனுசு ராசிக்கான மாசிமாதம் பலன்கள்  தனுசுக்கு ஏறக்குறைய ஏழரைச் சனி முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இனிமேல் சனியால் கெடுதல்கள் இருக்காது. பாக்யாதிபதி சூரியன் சொந்த வீட்டைப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நாட்கள் அவருடன் புதன் வலுவாக இருக்கிறார். மாசிமாதம் தனுசுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை பலன்கள் இருக்காது. திப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் […]

error: Content is protected !!
%d bloggers like this: