மாசி மாதம் ராசிபலன் – சிம்மம்
சிம்ம ராசிக்கான மாசிமாதம் ராசிபலன்
- ராசிநாதன் சூரியன் மாசிமாதம் முழுவதும் ராசியைப் பார்க்கும் அமைப்பில் உள்ளதாலும், தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சநிலை அடைவதாலும்
- இது வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் உயர்வுகள் உள்ள மாதமாக இருக்கும்.
- தொட்டது துலங்கும் காலம் என்பதால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி சிம்மத்தினர் எதிர்கால நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
- சிலருக்கு பெண்கள் வழியில் லாபங்கள் உண்டு. வேலைக்கு செல்லும் மனைவியால் தேவைகள் நிறைவேறுதல் இருக்கும்.
- வீடு வாங்குவதற்கு தடைகள் நீங்குகிறது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
- ஐந்தில் சனி இருப்பதால் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள்.
- பலருக்கு பிள்ளைகளால் கவலைகள் வரும். குழந்தைகளின் கையில் செல்போன் கொடுக்காதீர்கள்.
- அவர்கள் போன் பார்க்கும் நேரங்களை கட்டுப்படுத்துங்கள். குறிப்பாக பிள்ளைகளை போன் பார்க்க விட்டுவிட்டு சீரியல் பார்க்காதீர்கள்.
- மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும்.
- தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.