மாசி மாதம் ராசிபலன் – கன்னி
மாசி மாதம் கன்னி ராசிபலன்
- ராசிநாதன் புதன் மறைவு நிலையில் இருந்தாலும், உச்ச சுக்கிரன் ராசியைப் பார்ப்பது சிறப்பான நிலை என்பதால் கன்னிக்கு வழி காட்டும் மாதமாக மாசி அமையும்.
- புதனும், சுக்கிரனும் நல்ல அமைப்பில் இருப்பதால் வெளியிடங்களில் மதிப்புடன் நடத்தப் படுவீர்கள். சுக்கிரனின் நட்பு வலுவால் பெண்களால் லாபம் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள்.
- அம்மாவின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். உங்களில் சிலருக்கு இருந்து வந்த சாதகமற்ற நிலைமை இப்போது மாறுகிறது.
- சகோதர சகோதரிகளினால் நல்ல சம்பவங்களும், ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும்.
- ராசிக்கு சுக்கிரன் பார்வை உள்ளதால் மனம் உற்சாகமாக இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். எதையும், யாரையும் சமாளிப்பீர்கள்.
- வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும்.
- குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள்.
- பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள்.