மாசி மாத ராசிபலன் – விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான மாசி மாத பலன்கள்
- ஏழரைச்சனி காரணமாக முடக்கமான நிலையை சந்தித்த விருச்சிகத்திற்கு மாற்றம் வந்து விட்டது.
- இனிமேல் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொருளாதார மேன்மையுடன், நல்ல பணவரவு மற்றும் அந்தஸ்துடன் இருக்க வேண்டிய சூழல்கள் உருவாகி நல்ல எதிர்காலத்தை அடைவீர்கள்.
- எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு மாசி நல்ல மாதமே. குறிப்பாக ராசிநாதன் செவ்வாய் முழு சுபத்துவம் பெறுவதால் விருச்சிகராசிக்கு மாசி மாதம் நன்மைகளை மட்டுமே தரும்.
- உங்களின் பின்னடைவுகளை தீர்க்கும் மாதம் இது. கடன்தொல்லையில் இருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
- சுய தொழில் வைத்திருப்பவர்கள் இனி மேன்மைகளை அடைவீர்கள். மகன் மகள் விஷயத்தில் கவலைகள் தீரும்.
- முகம் தெரியாத ஒருவரால் தேவையற்ற விரயங்கள் வரும் என்பதால் புதிதாக அறிமுகமாகும் நட்புகளுடன் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். கலைஞர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- ஏதேனும் ஒரு செயல் அல்லது நிகழ்ச்சியால் நல்ல பேர் வாங்குவீர்கள். கணக்கு மற்றும் கம்ப்யூட்டர் துறையில் உள்ள சிலருக்கு வேலை மாற்றங்களும்,
- பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள்.