மாசி மாதம் ராசிபலன் – தனுசு
தனுசு ராசிக்கான மாசிமாதம் பலன்கள்
- தனுசுக்கு ஏறக்குறைய ஏழரைச் சனி முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இனிமேல் சனியால் கெடுதல்கள் இருக்காது.
- பாக்யாதிபதி சூரியன் சொந்த வீட்டைப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நாட்கள் அவருடன் புதன் வலுவாக இருக்கிறார்.
- மாசிமாதம் தனுசுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை பலன்கள் இருக்காது.
- திப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும்.
- யாருக்கும் ப்ராமிஸ் செய்யும் முன் யோசிப்பது நல்லது.
- சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. இனி உங்களின் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் சிக்கலின்றி நல்லபடியாக நடக்கும்.
- இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும்.
- போலீஸ், கோர்ட், கேஸ் உள்ளவருக்கு சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.
- எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
- வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள்.