மாசி மாத ராசிபலன் – மகரம்
மகர ராசிக்கான மாசி மாத ராசிபலன்
- ராசியில் சனி இருப்பதால் மகர ராசி இளைய பருவத்தினர் மனம் அலைபாயும் மாதம் இது.
- குறிப்பாக உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடப்பதற்கான அறிமுக சந்தோஷ நிலைகள் இப்போது இருக்கும்.
- எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம்.
- இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
- இளம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பவே வேண்டாம்.
- ஜென்மச் சனி நேரத்தில்தான் இழக்கக் கூடாத ஒன்றை காதல் என்ற பெயரில் இழப்பீர்கள். பின்பு இழந்து விட்டோமே என்று அழுவீர்கள். கவனம்.
- வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும்.
- குலதெய்வ வழிபாடு செய்ய முடியும். நடுத்தர வயதினருக்கு மாசி மாதம் நல்லவைகளைத் தரும்.
- ஆயினும் ஜென்மச் சனி நடப்பதால் சுயதொழில் செய்வோர் அகலக்கால் வைக்காதீர்கள். இளைய பருவத்தினர் புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டாம்.
- ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் தொழில் ஆரம்பிக்கலாம். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது.
- பண விஷயத்தில் கவனம் தேவை. உங்களில் சிலர் புலிவாலை பிடிப்பீர்கள். கவனமாக இருங்கள்.
- குறிப்பாக பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.