Astrology images

மாசி மாத ராசிபலன் -கும்பம்

 

கும்ப ராசி அன்பர்களே….

  • சுக்கிரனின் உச்ச நிலையால் கும்பராசிக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மாதம் இது.
  • வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும்.
  •  ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
  • சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுப காரியங்களும் இருக்கும்.
  • உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு.
  • வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள்  நடக்கும்.செவ்வாய் பதினொன்றாமிடத்தில் வலுப் பெற்று யோகத்தை தரக்கூடிய நிலையில் இருப்பதால் உங்களில் ரியல் எஸ்டேட் ,
  • வீடு கட்டுவோர், சமையல் போன்ற தொழில்களைச் செய்பவர்களுக்கு இது சிறப்பான மாதம்.
  • சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகம் இருக்கிறது. வாகன மாறுதல் கண்டிப்பாக இருக்கும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு நல்ல வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
  • தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். யாரையும் நம்பி எதையும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவையில்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள்.
READ  மாசி மாத ராசிபலன் - மகரம்

Related

Mesha rasi

மேஷ ராசிக்கு உகந்த தொழில்கள்

  மேஷராசி அன்பர்களே..!! ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மேஷ ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.

Astrology images

மாசி மாத ராசிபலன் – மகரம்

  மகர ராசிக்கான மாசி மாத ராசிபலன் ராசியில் சனி இருப்பதால் மகர ராசி இளைய பருவத்தினர் மனம் அலைபாயும் மாதம் இது. குறிப்பாக உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடப்பதற்கான அறிமுக சந்தோஷ நிலைகள் இப்போது இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். இளம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பவே வேண்டாம். ஜென்மச் சனி நேரத்தில்தான் இழக்கக் கூடாத ஒன்றை […]

Astrology images

மாசி மாதம் ராசிபலன் – தனுசு

  தனுசு ராசிக்கான மாசிமாதம் பலன்கள்  தனுசுக்கு ஏறக்குறைய ஏழரைச் சனி முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இனிமேல் சனியால் கெடுதல்கள் இருக்காது. பாக்யாதிபதி சூரியன் சொந்த வீட்டைப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நாட்கள் அவருடன் புதன் வலுவாக இருக்கிறார். மாசிமாதம் தனுசுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை பலன்கள் இருக்காது. திப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் […]

Astrology images

மாசி மாத ராசிபலன் – விருச்சிகம்

  விருச்சிக ராசிக்கான மாசி மாத பலன்கள்  ஏழரைச்சனி காரணமாக முடக்கமான நிலையை சந்தித்த விருச்சிகத்திற்கு மாற்றம் வந்து விட்டது. இனிமேல் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொருளாதார மேன்மையுடன், நல்ல பணவரவு மற்றும் அந்தஸ்துடன் இருக்க வேண்டிய சூழல்கள் உருவாகி நல்ல எதிர்காலத்தை அடைவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு மாசி நல்ல மாதமே. குறிப்பாக ராசிநாதன் செவ்வாய் முழு சுபத்துவம் பெறுவதால் விருச்சிகராசிக்கு மாசி மாதம் நன்மைகளை மட்டுமே தரும். உங்களின் பின்னடைவுகளை தீர்க்கும் மாதம் […]

error: Content is protected !!
%d bloggers like this: