Thakkali satni

தக்காளி பூண்டு கார சட்னி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

தக்காளி – 5 no

சிவப்பு மிளகாய் – 8 முதல் 10 வரை

பூண்டு – 12 பல்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – சுவைக்கு ஏற்ப

கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு

தயார் செய்முறை :

  1. முதலில் தக்காளியை நான்காக அரிந்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நேர்வாகில் அரிந்து கொள்ளவும்.
  2. இஞ்சியை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பூண்டைத் தோல் நீக்கி சுத்தமாக்கிக் கொள்ளவும்.பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்..
  3. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.
  4. அடுத்து பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதக்கவும்…வதக்கும் பக்குவம் தான் சட்னியின் சுவையை தீர்மானிக்கும்.தக்காளி தோல் நீங்கி சுருளானதும் அடுப்பை அணைத்து விடவும்.
  6. வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  7. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும்
  8. கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த அரைத்த சட்டியில் கொட்டி கலந்து பரிமாறவும்.

தனித்துவத்திற்கு:-

  1. இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் ஆகிய உணவு வகைகளுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
  2. மிளகு சேர்ப்பதால் வாசனையுடன் சுவை கூடும். வெளியூர் பயணங்களின் போது இச்சட்டினியைத் தயார் செய்து எடுத்துச் செல்லலாம்.
  3. நன்கு வதக்கி விடுவதால் கெட்டுப் போகாது.

இட்லி/தோசைக்கான சூப்பரான தக்காளி பூண்டு கார சட்னி ரெடி

குறிப்பு:

இச்சட்டினியை தயார் செய்யும் போது விருப்பம் உள்ளவர்கள் பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் வத்தல் சேர்த்து தயார் செய்யலாம்

 

குறை மற்றும் நிறைகளை தெரிவிக்க

படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை admin@nerkathir.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

READ  வத்தக்குழம்பு செய்வது எப்படி ?

Related

Chettinadu vathalkulambu

வத்தக்குழம்பு செய்வது எப்படி ?

  சீக்கிரமாகவும், எளிமையாகவும் மற்றும் விரைவாகவும் தயாராகும் வத்தக்குழம்பு பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள். READ  வத்தக்குழம்பு செய்வது எப்படி ?

error: Content is protected !!
%d bloggers like this: