பென்னியம்

கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு… பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்குத் துணை கொடு. மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு, மற்றைய நாளெல்லாம் சேயாகு. அவள் ஆடைகளை சலவை செய்வது அவமானம் அல்ல, நீ வழங்கும் சம தானம். இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு. உப்பு கறிக்கு கூடினாலும் தப்பு சொல்லி ஏசாதே. உதட்டு சுழிப்பை தவிர்த்து நீயும் அதையும் ருசிக்க தவறாதே. சின்னச் சின்ன சண்டைகள் தினம்தோறும் போட்டுக்கொள், சினம்கூடி பெரும்சண்டை வந்திடாமல் பார்த்துக்கொள். […]