மாசி மாத ராசிபலன் -கும்பம்

  கும்ப ராசி அன்பர்களே…. சுக்கிரனின் உச்ச நிலையால் கும்பராசிக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மாதம் இது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும்.  ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுப காரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள்  நடக்கும்.செவ்வாய் பதினொன்றாமிடத்தில் […]

மாசி மாத ராசிபலன் – மகரம்

  மகர ராசிக்கான மாசி மாத ராசிபலன் ராசியில் சனி இருப்பதால் மகர ராசி இளைய பருவத்தினர் மனம் அலைபாயும் மாதம் இது. குறிப்பாக உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடப்பதற்கான அறிமுக சந்தோஷ நிலைகள் இப்போது இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். இளம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பவே வேண்டாம். ஜென்மச் சனி நேரத்தில்தான் இழக்கக் கூடாத ஒன்றை […]

மாசி மாதம் ராசிபலன் – தனுசு

  தனுசு ராசிக்கான மாசிமாதம் பலன்கள்  தனுசுக்கு ஏறக்குறைய ஏழரைச் சனி முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இனிமேல் சனியால் கெடுதல்கள் இருக்காது. பாக்யாதிபதி சூரியன் சொந்த வீட்டைப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நாட்கள் அவருடன் புதன் வலுவாக இருக்கிறார். மாசிமாதம் தனுசுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை பலன்கள் இருக்காது. திப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் […]

மாசி மாத ராசிபலன் – விருச்சிகம்

  விருச்சிக ராசிக்கான மாசி மாத பலன்கள்  ஏழரைச்சனி காரணமாக முடக்கமான நிலையை சந்தித்த விருச்சிகத்திற்கு மாற்றம் வந்து விட்டது. இனிமேல் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொருளாதார மேன்மையுடன், நல்ல பணவரவு மற்றும் அந்தஸ்துடன் இருக்க வேண்டிய சூழல்கள் உருவாகி நல்ல எதிர்காலத்தை அடைவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு மாசி நல்ல மாதமே. குறிப்பாக ராசிநாதன் செவ்வாய் முழு சுபத்துவம் பெறுவதால் விருச்சிகராசிக்கு மாசி மாதம் நன்மைகளை மட்டுமே தரும். உங்களின் பின்னடைவுகளை தீர்க்கும் மாதம் […]

மாசி மாதம் ராசிபலன் – துலாம்

  துலாம் ராசிக்கான மாசி மாத ராசிபலன் துலாம் நாதன் சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் தடைப்பட்டுக் கொண்டிருந்த அனைத்தும் மாசி முதல் நல்லபடியாக நிறைவேறும். எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சிலருக்கு இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு நல்ல வாகனம் வாங்க முடியும். புதிய வாகன யோகம் இருக்கிறது. எதிர்பாராத தன லாபங்கள் இருக்கும். இழுத்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு […]

மாசி மாதம் ராசிபலன் – கன்னி

  மாசி மாதம் கன்னி ராசிபலன் ராசிநாதன் புதன் மறைவு நிலையில் இருந்தாலும், உச்ச சுக்கிரன் ராசியைப் பார்ப்பது சிறப்பான நிலை என்பதால் கன்னிக்கு வழி காட்டும் மாதமாக மாசி அமையும். புதனும், சுக்கிரனும் நல்ல அமைப்பில் இருப்பதால் வெளியிடங்களில் மதிப்புடன் நடத்தப் படுவீர்கள். சுக்கிரனின் நட்பு வலுவால் பெண்களால் லாபம் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். அம்மாவின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். உங்களில் சிலருக்கு இருந்து வந்த சாதகமற்ற நிலைமை இப்போது மாறுகிறது. சகோதர […]

மாசி மாதம் ராசிபலன் – சிம்மம்

  சிம்ம ராசிக்கான மாசிமாதம் ராசிபலன் ராசிநாதன் சூரியன் மாசிமாதம் முழுவதும் ராசியைப் பார்க்கும் அமைப்பில் உள்ளதாலும், தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சநிலை அடைவதாலும் இது வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் உயர்வுகள் உள்ள மாதமாக இருக்கும். தொட்டது துலங்கும் காலம் என்பதால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி சிம்மத்தினர் எதிர்கால நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு பெண்கள் வழியில் லாபங்கள் உண்டு. வேலைக்கு செல்லும் மனைவியால் தேவைகள் நிறைவேறுதல் இருக்கும். வீடு வாங்குவதற்கு தடைகள் நீங்குகிறது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு […]

மாசி மாதம் ராசிபலன் – கடகம்

  மாசி மாதம் கடகம் ராசிபலன் சூரியன் எட்டில் இருப்பது. கடக ராசிக்கு பொருளாதார விஷயத்தில் சாதகமற்ற நிலைதான் என்றாலும் ராஜயோகாதிபதி செவ்வாய் சுபத்துவமாக ஆறில் இருப்பதால் சிக்கல் எதுவும் வராது. அதேநேரத்தில் பண விஷயங்கள் முயற்சிகளுக்கு பின்பே வெற்றி அடையும். சுக்கிரனின் உச்சநிலையால் பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் […]

மாசி மாதம் ராசிபலன் – மிதுனம்

  மிதுனம் ராசிக்கான மாசி மாதம் மிதுன ராசிக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில் சுபக்கிரகமான குரு ஏழில் இருந்து ராசியைப் பார்ப்பதால் எத்தனை பிரச்னை வந்தாலும் அது சூரியனைக் கண்ட பனி போல விலகும் என்பது உறுதி. அஷ்டமச் சனி நடப்பதால் சிலருக்கு கடன் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். கவனமாக இருங்கள். முறைகேடான வழிகளில் வரும் வருமானத்தின் போது கவனம் தேவை. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் அதிநட்பு வீட்டில் இருப்பதால் நல்ல […]

மாசி மாதம் ராசிபலன் – ரிஷபம்

  ரிஷபம் ராசிக்கான மாசிமாத பலன்கள் மாசிமாத பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் இருப்பதும், பத்தில் சூரியன் அமர்ந்து தன் நான்காம் வீட்டை பலப்படுத்துவதும் ரிஷப ராசிக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு. உங்களின் மன உறுதி நன்றாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. பத்தாமிட சூரியனால் வேலை, தொழில், வியாபார அமைப்புகளில் நன்மைகள் நடக்கும். சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் அனைத்து நல்லவைகளும் அதிக முயற்சி இன்றி நடக்கும். கிருத்திகை […]

error: Content is protected !!