சிக்கன் பிரியாணி அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்
சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- பாசுமதி அரிசி – 2 டம்ளர்
- சிக்கன் – 1/2 கிலோ
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- பச்சைமிளகாய் – 2
- கொத்தமல்லி – சிறிதளவு
- புதினா – சிறிதளவு
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
- பட்டை – 2
- லவங்கம் -5
- ஏலக்காய் – 2
- பிரியாணி இலை – 4
- சீரகம் – 1 டீஸ்பூன்
- தயிர் -2 டீஸ்பூன்
- 1பிரியாணி இலை
- 1ஸ்பூன் சோம்பு
- 1மராட்டி மொக்கு
- 3டம்ளர் தண்ணீர்
- 3மேசைக்கரண்டி எண்ணெய்
- 1மேசைக்கரண்டி நெய்
செய்முறை:-
- கோழி கறியை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வைக்கவும். பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும்.
- குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, மராட்டி மொக்கு சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு புதினா,கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- தயிர் சேர்த்து நன்கு கலந்து விட்டு வதக்கவும்.
- பிறகு நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கோழி கறியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- மூடி வைத்து கறி பாதி அளவு வெந்து தண்ணீர் விட்டு வரும் வரும் வரை வேக வைக்கவும்.
- பிறகு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- தண்ணீர் ஒரு கொதி வந்ததும் பாஸ்மதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதில் சேர்த்து கலந்து விடவும்.
- சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.
முதல் முறை செய்பவர்கள் குக்கரை தவிர்த்து அலுமினியம் தேக்சா வில் உபயோகித்தால் சிறப்பு
விசில் போனதும் மூடியை திறந்து பக்குவமாக கிளறி விட்டு 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி 5 நிமிடம் மூடி வைத்து பிறகு சூடாக பரிமாறவும். சுவையான சிக்கன் பிரியாணி தயார்.
சமைக்க ஆகும் நேரம் – 1 மணிநேரம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2
Briyani in easy step tamil |Here we have Chicken biryani recipe in Tamil| It is also called as Chicken biryani seimurai or Chicken biryani seivathu eppadi in Tamil or Chicken biryani preparation in Tamil

சிக்கன் பிரியாணி அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக
எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்