திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்


ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம்.

  • கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
  • இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர்.

 

   1.திருவோணம் நட்சத்திரம் முதல் பாதம்:

   செவ்வாய் இதன் அதிபதி. இதில் பிறந்தவர்கள் சௌகரியத்தை விரும்புவர்.
   தனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பவர்கள், பிறருக்கு செலவழிக்க யோசிப்பார்கள். 
   உடல்நலக் குறைவு அவ்வப்போது ஏற்படும். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

   2.திருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:

   சுக்கிரன் இதனை ஆட்சி செய்பவர். இவர்கள் சுகத்தை விரும்புபவர்கள். 
   திறமைசாலிகள். தலைமை தாங்கும் இயல்பும், 
   தெய்வபக்தி உள்ளவர்கள். பெரியோர்களை மதிப்பவர்கள்.

   3.திருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:

   புதன் இதன் அதிபதி. நிறைவான ஞானம், பக்தி உடையவர்கள். 
   யோகி போல வாழ்பவர்கள். தர்மம் செய்வதிலும் கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.
   கோபம், குணம் இரண்டும் இருக்கும். 

   4.திருவோணம் நட்சத்திரம் நான்காம் பாதம்: 

   சந்திரன் இந்தப் பாதத்தை ஆட்சி செய்கிறார். இவர்கள் சௌகரியமும், சௌபாக்கியமும் பெற்று வாழ்பவர்கள்.
   பாசமும் நேசமும் மிக்கவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். நட்பு மிக்கவர்கள். நியாயவாதிகள். 
   உடனடிக் கோபமும் உடனடி சாந்தமும் இவர்கள் இயல்பு.

By ak

Leave a Reply